"Have A Good Day"

Sunday, June 6, 2010

ஆப்பம்

ஆப்பம்
தேவையானவை:
பச்சரிசி - 2 கப்
தேங்காய் - 1 கப்
வடித்த சாதம் - 1/2 கப்
சோடியம் பை கார்பனேட் - 1 பின்ச்
உப்பு தேவைக்கு
சர்க்கரை - 1 தேக்கரண்டி
செய்முறை
1. அரிசியை சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
2. அரிசியுடன் தேங்காய், சாதம் கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த மாவில் ஒரு கரண்டி எடுத்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து உங்கள் தேவைக்கு உப்பு சேர்த்து ( 1/2 தேக்கரண்டி பொதுமானது) கூழுப் போல் காய்ச்சி ,ஆறியவுடன் மாவில் கலந்து சுமார் பத்து முதல் பன்னிரண்டு மணிநேரம் புளிக்க விடவும்.(கூழு காய்ச்சி ஊற்றுவதால் ஆப்பம் நல்ல மிருதுவாக வரும்.)
4. புளித்த மாவுடன் சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து ஆப்பம் வார்க்கவும்.
5. மாவை கொஞ்சம் கட்டியாக வைத்து தோசைக் கல்லிலே, நடுவில் கனமாகவும் ஓரத்தில் மெல்லியதாகவும் விடலாம். அல்லது சின்ன பசங்களுக்கு பிடிக்கும் விதமாக ரொம்ப மெல்லியதாக, ஒரு கரண்டி மாவில் மெல்லியதாக பரத்தி முறுவலாக சுட்டு எடுக்கலாம்.
6. கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஆப்ப சட்டியில் ஒரு கரண்டி மாவை ஊற்றி கைப்பிடியைப் பிடித்து ஒரு சுற்று சுற்றினால் நடுவில் கனமாகவும், ஓரங்களில் மெலிதான ஆப்பம் கிடைக்கும்.
7. உருளைக்கிழங்கு மசாலாக் கறி அல்லது சிக்கன் கறியுடன் நன்றாக இருக்கும். 8.தேங்காய் வழுக்கையாக இருந்தால் ருசி நன்றாக இருக்கும். தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர் விட்டு அரைத்தால் அப்பம் பூ போல இருக்கும்.
9. ஆப்பத்தை மூடி வைத்து வேகவைக்கவும்

No comments:

Post a Comment