"Have A Good Day"

Sunday, June 6, 2010

நெல்லிக்காய் விடிவெளம்

நெல்லிக்காய் விடிவெளம்

தேவையானவை:
நெல்லிக்காய் - அரிந்தது - 1 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - 1 சிறிய துண்டு
உப்பு - தேவைக்கு
சீரகம் + வெந்தயம் வறுத்து பொடித்தது  - 1/2 தேக்கரண்டி
தாழிக்க
நல்லெண்ணெய் - 2 மேசைக் கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
 1. வாணலியில் எண்ணெயைவிட்டு நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். சிறிது சுருங்க ஆரம்பிக்கும் போது எடுத்து விடவும்.
2. அதே எண்ணெயில் கடுகு , காய்ந்த மிளகாய் போட்டு தாழிக்கவும்.
3. கடுகு வெடித்தவுடன் பெருங்காய தூளை போட்டு ஒரு கிண்டு கிண்டி விட்டு அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
4. தண்ணீர் கொதித்தவுடன் மிளகாய் தூள் , மஞ்சள் தூள் , உப்பு, வெல்லம் போட்டுக் கொதிக்க விடவும்.
5. நன்றாக கொதித்து அரை கப்பாக வற்றியவுடன் நெல்லிக்காயைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.  அணைத்த  பிறகு வெந்தயம், சீரக பொடியை தூவவும்.
6.நெல்லிக்காய் விடிவெளம் ரெடி.

No comments:

Post a Comment