முறுக்கு
தேவையானப் பொருட்கள்
உளுந்து - 1 கப்
அரிசி மாவு - 3 - 31/2 கப்
எள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
எண்ணெய் - பொரித்தெடுக்க.
செய்முறை:
1.உளுந்தைக் நன்றாகக் கழுவி ஒன்றுக்கு மூன்று கப் தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் வைத்து வேகவைக்கவும் ( உளுந்து : தண்ணீர் = 1:3)
2. வெந்த உளுந்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் நன்றாக அரைந்து விடும்.
3. அரைத்த கலவையுடன் அரிசி மாவு, எள், சீரகம் , வெண்ணெய் தேவைக்கு உப்பு போட்டு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும். 3 முதல் 3 1/2 கப் அரிசி மாவு தேவைப்படும்.
4. பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு முறுக்காக பிழிந்துக் கொள்ளவும்.
5. எண்ணெயை காய வைத்து பிழிந்த முறுக்கை போட்டு வேக வைத்து எடுக்கவும்
6.சுவையான முறுக்கு ரெடி
No comments:
Post a Comment