"Have A Good Day"

Sunday, June 6, 2010

ஹரா பரா கபாப்



ஹரா பரா கபாப்
தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு : 1 
 பட்டாணி  : கால் கப்
பாலக்  : கால் கப்
கொத்தமல்லி இலை: 1 மேசைக்கரண்டி

இஞ்சி  : 1 "
பச்சமிளகாய்  : 1
சாட்மசலா : 1 தேக்கரண்டி
சீரக தூள் : கால் தேக்கரண்டி
கார்ன் மாவு : 1 மேசைக்கரண்டி

உப்பு தேவைக்கு
செய்முறை:
1.பச்ச மிளகாய் , இஞ்சி , கொத்தமல்லியை மெலிதாக அரிந்து கொள்ளவும்.
2. உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மெலிதாக துருவி வைத்துக் கொள்ளவும்.
3. பாலக்கை ப்ளான்ஞ் பண்ணவும்.( தண்ணீரில் 1/2 தேக்கரண்டி உப்பு போட்டு கொதிக்க வைத்து அதில் பலாக்கைப் 2 நிமிடம்  போட்டு மூடிவைக்கவும்) பின் பலாக்கை வெளியே எடுத்து  தண்ணீர் சுத்தமாக இல்லாமல் நன்றாக பிழிந்து , மெலிதாக அரிந்துக் கொள்ளவும். இது கால் கப் இருக்கவேண்டும். 
4. இதுபோல் பச்சைப்பட்டாணியையும் ப்ளான்ஞ் பண்ணி கொரகொரப்பாக மிக்ஸியில்  போட்டு எடுக்கவும்.  இது கால் கப் இருக்கவேண்டும்.
5.அரிந்து வைத்துள்ள பச்ச மிளகாய் , இஞ்சி , கொத்தமல்லி இவற்றுடன் துருவி வைத்துள்ள உருளைக்கிழங்கை, அரிந்து வைத்துள்ள பலாக், பட்டாணி ,பொடிவகைகள்  மற்றும் உப்பு தேவைக்கு சேர்த்து நன்றாக கலக்கவும். பாதாம் அல்லது முந்திரியை இரண்டாக ஒடித்து இதனுடன் போடலாம். நான் ஐந்து பாதாம்  போட்டு உள்ளேன்.
7. அடுப்பில் எண்ணெயை வைத்து இந்த கலவையை மிதமான தீயில் வடை போல் பொரித்து எடுக்கவும். 
8.  மொறுமொறுப்பான ஹரா பரா கபாப் ரெடி. 









No comments:

Post a Comment