முட்டை ஆம்லெட் அவியல்
இது என் அம்மாவின் சமையல் குறிப்பு. கன்னியாக்குமரி மாவட்டத்தில் இதை செய்வார்கள். கன்னியாக்குமரி சமையலில் தேங்காய் அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.அம்மா ஆம்லெட்டுக்கும் சின்னவெங்காயம் தான் உபயோகிப்பார்கள். அருமையான சுவையுடன் இருக்கும்.
தேவையானப் பொருட்கள்:
ஆம்லெட் செய்ய:
முட்டை: 2
வெங்காயம் : 1
பச்ச மிளகாய் : 2
உப்பு : 1/4 டீக்கரண்டி
அவியலுக்கு தேவையானவை:
தேங்காய் - 2 மேஜைக் கரண்டி
சின்னவெங்காயம்: 3
சீரகம் : 1 டீக்கரண்டி
மிளகாய் தூள்: 1 டீக்கரண்டி
மஞ்சள் தூள்: 1/2 டீக்கரண்டி
உப்பு : 1/4 டீக்கரண்டி
தாழிக்க:
எண்ணெய்: 1 மேஜைக் கரண்டி
கடுகு : 1/2 டீக்கரண்டி
வெந்தயம் : 1/4 டீக்கரண்டி
கரிவேப்பிலை : 1 ஆர்க்கு
அரிந்த வெங்காயம் : 1 மேஜைக் கரண்டி
செய்முறை:
1. அவியலுக்கு கொடுத்திருக்கும் பொருட்களை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2. முட்டை, வெங்காயம்,பச்சைமிளகாய் , உப்பு கலந்து கொஞ்சம் தடிமனான ஆம்லெட்டாகப் போடவும்.
3. பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை , வெங்காயம் போட்டு தாழிக்கவும்.
4. இதில் அரைத்த கலவையைப் போட்டு 1/2 கப் தண்ணீர் ,உப்பு போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
5. ஆம்லெட்டை சதுர துண்டுகளாக வெட்டி கொதிக்கும் கலவையில் போட்டு தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும்.
6. சுவையான ஆம்லெட் அவியல் ரெடி.
No comments:
Post a Comment