சான்ட்விச்
தேவையானப் பொருட்கள்
பன் - 1
க்ரீன் சட்னி - 2 தேக்கரண்டி
சீஸ் ஸ்பெரெட் - 2 தேக்கரண்டி
வெள்ளரிக்காய் துண்டுகள் - 2
காரட் துருவல் - 1 தேக்கரண்டி
தக்காளி கெட்சப் - 1 தேக்கரண்டி
க்ரீன் சட்னி செய்ய:
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
புதினா - 1/2 கட்டு
கறிவேப்பிலை - 5 ஆர்க்கு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 2 " துண்டு
புளி - சிறு எலுமிச்சை அளவு
பொட்டுக்கடலை - 2 மேஜைக் கரண்டி.
தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
க்ரீன் சட்னி செய்முறை:
1. கொத்தமல்லி, புதினா , கறிவேப்பிலையை சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும்.
2. முதலில் மிக்ஸியில் கீரைகளைப் போட்டு ஒரு சுத்து சுத்திவிட்டு,பின்னர் பச்சமிளகாய்,இஞ்சி, புளி உப்புப் போட்டு அரைக்கவும்.
3.கடைசியில் தேங்காய், பொட்டுக்கடலை போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.க்ரீன் சட்னி தயார். இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு 2- 3 நாட்கள் உபயோகிக்கலாம்.
சான்ட்விச் செய்முறை:
1. பன்னை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
2. ஒரு பக்கத்தில் க்ரீன் சட்னியும் மறுபக்கத்தில் சீஸ் ஸ்பெரெட்டைத் தடவவும்.
3.க்ரீன் சட்னிப் பக்கத்தில் காரட் துருவலை பரப்பவும்
4. சீஸ் ஸ்பெரெட் பக்கத்தில் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி கெட்சப்பை பரப்பவும்.
5. இரண்டு பக்கத்தையும் மூடிவிடவும் . சத்தான சுவையான சான்ட்விச் ரெடி.
No comments:
Post a Comment