தேவையானவை
உருளைக் கிழங்கு - 2
காரட் - 1
தக்காளி - 1
பச்ச மிளகாய் - 1
கொத்தமல்லி + புதினா தழை - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
கறி மசால் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 4 மேசைக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 1 தேக்கரண்டி
கறி மசால் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 4 மேசைக்கரண்டி
மல்லி தழை அரிந்தது - 1 மேசைக்கரண்டி
தாழிக்க
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை - 1 " துண்டு
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
செய்முறை
1. உருளை கிழங்கை அவித்து தோலுரித்து சதுர துண்டங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
2.தேங்காயில் , பாதியை அரைத்து பால் எடுக்கவும், மீதியை நன்றாக அரைத்து கொள்ளவும்.
3. காரட், வெங்காயம் , தக்காளியையும் சதுர துண்டங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.பச்ச மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
4. பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி தாழிக்க கொடுத்திருக்கும் பொருட்களை போட்டு தாழிக்கவும்.
5. வெங்காயத்தை முதலில் போட்டு கண்ணாடி போல் ஆனதும் , தக்காளி, காரட் போட்டு வதக்கவும்.
6. பாதி வதங்கியவுடன், உருளை கிழங்கு மற்றும் எல்லா தூள்களையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
7. தேங்காய் இரண்டாவது பாலை ஊற்றி காய்களை நன்றாக வேகவிடவும்.
காய்கள் நன்றாக வெந்தவுடன் முதல் பால் ஊற்றி சூடு ஏறியவுடன் இறக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
8.சுவையான உருளை காரட் மசாலாக் கறி ரெடி
No comments:
Post a Comment