"Have A Good Day"

Sunday, June 6, 2010

முள்ளு சூப் கொழுக்கட்டை

முள்ளு சூப் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
சூப்பிற்கு
மட்டன் - 1/2 கிலோ.
காய்ந்த மிளகாய் - 5 (சிறியது)
கொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 15
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
உப்பு தேவைக்கு
கொழுக்கட்டைக்கு
புழுங்கல் அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
  செய்முறை:
1. அரிசியை ஒரு மணி நேரமும் , உளுந்தை அரை மணிநேரமும் ஊற வைக்கவும்.
2. உளுந்தை நன்றாக அரைக்கவும்.
 அரிசியை கொரகொரப்பாக கொழுக்கட்டைக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும்.
3. மிளகாய் , கொத்தமல்லி, சோம்பு , சீரகம் இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுத்து எடுக்கவும்.
4. வறுத்த பொருட்கள் ஆறிய பின் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அதே பொடியுடன் சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. மட்டனைக் கழுவி அரைத்த விழுதில் முக்கால் பகுதியைப் போட்டு கால் தேக்கரண்டி உப்பும் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விடவும்.
5. கொழுக்கட்டை மாவுடன் அரைத்து மீதி வைத்திருக்கும் மசாலாவைப் போட்டு தேங்காயையும் போட்டு ,முக்கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து  இட்லி தட்டில் வைத்து கொழுக்கட்டையாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
6. குக்கரில் ஆவி அடங்கியவுடன் கொழுக்கட்டையையும் போட்டு தேவைக்கு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவைக்கவும்.
7. சுவையான குளிர்ச்சியான, கோடைக்கு இதமான ,சத்தான முள்ளு சூப் கொழுக்கட்டை ரெடி.

No comments:

Post a Comment