"Have A Good Day"

Sunday, June 6, 2010

கடலை , மொச்ச கொட்டை தீயல்

கடலை , மொச்ச கொட்டை தீயல்
தேவையானவை:
கடலை - 1/2 கப்
மொச்சை - 1/4 கப்
கத்தரிக்காய் - 1
முருங்கை காய் -   5 துண்டு
சின்ன வெங்காயம் - 5
பச்ச மிளகாய் - 1
கொத்தவரங்காய் ( வத்தல்) - 5
சுண்டைக் காய் (வத்தல்) - 5
வடகம் - 3
புளி - 1 எலுமிச்சை அளவு (1 கப் தண்ணீரில் ஊற வைத்து புளி சாறு எடுத்து கொள்ளவும்)

வறுக்க
தேங்காய் - 1 மூடி
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
சின்னவெங்காயம் - 5
மிளகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி பொடி - 2 தேக்கரண்டி
தாழிக்க
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 /2 தேக்கரண்டி

செய்முறை
1. கடலை மற்றும் மொச்சையை 8 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
2. ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி தேங்காய் , வெங்காயம், கறிவேப்பிலை
,மிளகு போட்டு வறுத்து இறக்கும் போது பொடிகளைப் போட்டு இறக்கவும். ஆறியவுடன் நன்றாக அரைத்து கொள்ளவும்.

3. ஊற வைத்த கடலைகளை குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
4.முருங்கை காயை தனியாக கால் கரண்டி உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும்.
5.அரைத்து வைத்திருக்கும் தேங்காய் அரைப்புடன் புளி தண்ணீர் சேர்த்து உப்பு தேவைக்கு போட்டு வைத்துக் கொள்ளவும்.
6. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும்  கொத்தவரங்காய், சுண்டைக்காய் , வடகத்தை வறுத்து எடுத்து கொள்ளவும். பின் அதே எண்ணெயில் தாழிக்க கொடுத்திருக்கும் பொருட்களை போட்டு தாழிக்கவும்.

7. கடுகு தாழித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
8. வெங்காயம் வதங்கியவுடன் கத்தரிக்காய் போடவும்.
9.இப்போது முருங்கை காயை , அவித்து வைத்திருக்கும் கடலை , தேங்காய் அரைப்பு கலவை போட்டு கொதித்ததும், வறுத்து வைத்திருக்கும் பொருட்களையும் போட்டு
 எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
10. தீயல் ரெடி.

No comments:

Post a Comment