தேவையானவை:
தம் முட்டைக்கு
முட்டை - 3
சோம்பு + சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு 1/4 தேக்கரண்டி
குழம்பிற்கு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லிதூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு + சீரகம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 5 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
பச்ச மிளகாய் - 1
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு தேவைக்கு
செய்முறை :
1. முட்டை ,சோம்பு + சீரக தூள்,
மிளகாய் தூள் ,உப்பு போட்டு அடித்து, ஒரு கின்ணத்தில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.
2. முட்டை வெந்தவுடன் ( கத்தியால் குத்தி பார்த்து ஒட்டவில்லை என்றால் வெந்துவிட்டது ) வெளியில் வைத்து ஆற விடவும்.
3. ஆறிய பின் கத்தியால் நான்காக வெட்டி கத்தியைக் கொண்டு பாத்திர ஓரங்கள் வழியாக மெதுவாக எடுக்கவும். கேக் போல் நன்றாக வந்து விடும்.
4. குழம்பிற்கு கொடுத்திருக்கும் பொருட்களில் பச்சமிளகாய், பாதி கறிவேப்பிலை தவிர மீதம் உள்ள மிளகாய் தூள்,மல்லிதூள் ,மஞ்சள் தூள் ,மிளகு தூள் ,சோம்பு + சீரகம் ,தேங்காய் ,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
5. புளியை ஊறவைத்து ஒரு கப்பு புளிச்சாறு எடுத்து கொள்ளவும்.
6. பாத்திரத்தில் அரைத்து வைத்திருக்கும் விழுது, புளிச்சாறு, தேவைக்கு உப்பு , கறிவேப்பிலை, பச்ச மிளகாய் இரண்டாக நீளவாக்கில் வெட்டியது போட்டு கொதிக்க விடவும். பச்ச வாசனை போன வுடன் முட்டையைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
No comments:
Post a Comment