தேவையானவை
ஆப்ப மாவு - 1 கிண்ணம்
தோசை மாவு - 3/4 கிண்ணம்
வெங்காயம் - 1
பச்ச மிளகாய் - 1
தாழிக்க
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
செய்முறை
1. வாணலியை அடுப்பில் வைத்து கடுகு , உளுத்தம் பருப்பு தாழித்து , வெங்காயம் , பச்ச மிளகாய் போட்டு வதக்கவும்.
2. இரண்டு மாவையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி , வதக்கிய வெங்காயம் , பச்சமிளகாய் கலவையை போட்டு நன்றாக கலக்கவும்.
3. குழிசட்டியை அடுப்பில் வைத்து , குழியின் பாதிக்கு எண்ணெய் ஊற்றி , ஒரு சின்னகரண்டியால் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
4. பணியாரம் ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் வேகவைக்கவும்.
5. சுவையான குழிபணியாரம் ரெடி.
தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment