- green chillies (large)- 250gms slit
- lengthwise and deseeded
- Cooking oil - 50gms.
- coconut -¼ cup
- peanuts - ¼ cup
- sesame seeds - 3 tablespoons
- Chilli powder -2 ½ teaspoons
- coriander powder -4 teaspoons
- cumin powder -4 teaspoons
- Onion paste- 5 tablespoon
- Ginger paste -1 teaspoon
- Garlic paste -1 teaspoon
- Jaggery - 1 teaspoon
- Kolanji (onion seed) - 1 teaspoon
- Tamarind - lemon size
- Salt to taste
Method :
- Fry the peanuts ,coconut and sesame seeds till they become red ,cool it and make it into powder.
- slit green chillies in lengthwise.
- Soak tamarind in warm water for 10 minutes, squeeze out tamarind water.
- Heat oil in a kadai fry the green chillies to golden brown. Drain excess oil and keep aside.
- In the same oil onion seed, then add onion paste ,in that add ginger garlic paste cook on low heat for 10 minutes.
- Now add chiili, coriander and cumin powder and cook for 2 minutes.
- Add tamarind juice , when it starts to boil add salt , jaggery and chilli , simmer for another 10 minutes . the oil will come up. Now it is ready to serve.
தேவையானப் பொருட்கள்
பஜ்ஜி மிளாகாய்- 250 கி
எண்ணெய்- 50கி
தேங்காய்- 1/4 கப்
நிலக்கடலை - 1/4 கப்
எள்- 3 மேஜைக் கரண்டி
மிளகாய் தூள் - 21/2 டீக்கரண்டி
கொத்தமல்லித் தூள்- 4 டீக்கரண்டி
சீரகத் தூள்- 4 டீக்கரண்டி
வெங்காய விழுது - 3 மேஜைக் கரண்டி
இஞ்சி விழுது - 1 டீக்கரண்டி
பூண்டு விழுது - 1 டீக்கரண்டி
வெல்லம் - 1 டீக்கரண்டி
கொலஞ்சி - 1 டீக்கரண்டி
புளி - 1 எலுமிச்சை அளவு.
உப்பு - தேவைக்கு
செய்முறை:
1. முதலில் கடாயை வைத்து கடலையைப் போட்டு வறுக்கவும். பாதி வறுத்ததும் எள்ளைப் போட்டு, இரண்டு கிண்டு கிண்டிவிட்டு தேங்காயை சேர்த்து நல்ல சிவப்பாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். (சீரகப்பொடி என்னிடம் இல்லாததால் கடலையுடன் சீரகத்தைச் சேர்த்து பொடிப் பண்ணியுள்ளேன். )
2.மிளகாயை காம்பிலிருந்து பாதி வரைக்கும் வெட்டிக் கொள்ளவும்.
3. முதலில் கடாயில் எண்ணெயை ஊற்றி மிளகாயை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.அதே எண்ணெயில் கொலஞ்சியைப் போடவும்.( கொலஞ்சிக் கிடைக்கவிட்டால் பரவாயில்லை. உடலுக்கு ரொம்ப நல்லது).
4.அதில் வெங்காய விழுதைப் போடவும். 3 நிமிடம் வதக்கியப் பின் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
5.கலவை நன்றாக வதங்கியவுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
6.இப்போழுது புளிக்கரைசலை விட்டு ஒரு கொதி வந்தவுடன் வெல்லம், தேவையான அளவு உப்பு சேர்த்து, அதில் வதக்கிய மிளகாயைப் சேர்த்து எண்ணை மேல் பிரிந்து வரும் வரை குறைந்த தீயில் சமைக்கவும்.
7.பஜ்ஜி மிளகாய் மசாலா ரெடி
No comments:
Post a Comment