"Have A Good Day"

Sunday, June 6, 2010

கூட்டஞ்சோறு

கூட்டஞ்சோறு
தேவையானவை:
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
கத்தரிக்காய் - 1
வாழைக்காய் - 3 " துண்டு
முருங்கை காய் - 3 துண்டு
கொத்தவரங்காய் - 5
சேனை  - 100 கி
வெள்ளரிக்காய் - 100 கி
காரட் - 1
பச்ச மிளகாய் - 2
முருங்கை கீரை - 1 பிடி
1.அரைக்க
வத்தல் மிளகாய் - 7
மஞ்சள் பொடி- 1 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 7
2. அரைக்க
தேங்காய் - 1 மூடி
சீரகம் - 1 தேக்கரண்டி
தாழிக்க
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வர மிளகாய் - 2
செய்முறை:
 1. காய்கறிகளை அவியலுக்கு அரிவது போல் அரிந்துக் கொள்ளவும்.
2. வெங்காயம் , மிளகு, வர மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணய் ஊற்றி , சூடானவுடன் காய்கறிகளை போட்டு , ரெண்டு கிண்டு கிண்டிவிட்டு அரைத்து வைத்திருக்கும் அரைப்பை போடவும். ஒரு கொதி விடவும்.
3. அரிசி பருப்பை  கழுவி குக்கரில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் , ,காய்கறிகளை போட்டு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.
4.தேங்காய் , சீரகத்தை ஒன்றிரண்டாக அரைத்துக் வைத்து கொள்ளவும்.
5. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு தாழித்து  கீரையை போடவும். கீரை வதங்கியவுடன் தேங்காய் அரைப்பை போட்டு கிளறவும்.
6. குக்கர் ஸ்டீம் போனவுடன் திறந்து தழித்து வைத்திருக்கும் கீரையை போட்டு கிளறி பத்து நிமிடம் மிக குறைந்த தீயில் குக்கரை மூடி வெயிட் போடாமல் வைக்கவும்.
7. சுவையான சத்தான கூட்டாஞ்சோறு ரெடி.

No comments:

Post a Comment