"Have A Good Day"

Sunday, June 6, 2010

வெங்காய சட்னி

வெங்காய சட்னி
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1 மேசை கரண்டி
நல்லெண்ணெய் - 1 மேசைக் கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
பெருங்காய தூள் - 1 பின்ச்
தாழிக்க
எண்ணெய் - 1 மேசைக் கரண்டி
கடுகு - 1/2 தெக்கரண்டி
கறிவேப்பிலை- 1 ஆர்க்கு
 செய்முறை
1. வெங்காயம் , தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்
2. வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாழிக்கவும்.
3. தாழித்ததில் வெங்காயம் , தக்காளி,தேங்காயை போட்டு வதக்கவும்.கடைசியில் மிளகாய் தூள்,பெருங்காய தூள்  சேர்த்து கிளறி இறக்கவும்
4. ஆறிய பின்  வதக்கிய பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
5. அரைத்த சட்னியை வேறு பாத்திரத்திற்கு மாற்றி  உப்பு சேர்த்து  கலக்கி  , அதில் கடுகு தாழித்து ஊற்றவும்.
வெங்காய சட்னி ரெடி.


No comments:

Post a Comment