"Have A Good Day"

Sunday, June 6, 2010

Crab Fry -நண்டு வறுவல்

நண்டு வறுவல்
தேவையானவை
நண்டு - 4
 வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்ச மிளகாய் - 3
இஞ்சி , பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசை கரண்டி
 கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
உப்பு தேவைக்கு.
செய்முறை :
 1. முதலில் வெங்காயத்தை மெல்லியதாக அரிந்துக் கொள்ளவும். ஃப்ட் ப்ராசசரில் போட்டால்  நல்ல மெல்லியதாக வரும். பச்ச மிளகாயையும் மெல்லிதாக வெட்டிக் கொள்ளவும். நண்டை கழுவி சுத்தம் செய்து ரெடியாக்கி வைத்து கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு ,கறிவேப்பிலை போட்டு தாழித்து, பச்ச மிளகாய் ,வெங்காயத்தை போடவும்.
3. வெங்காயம் சிவக்க ஆரம்பிக்கும் போது தக்காளியை போட்டு வதங்கியவுடன் இஞ்சி , பூண்டு விழுதைப் போட்டு மூடிவிடவும்.
4. வெங்காயம் ,தக்காளி வதங்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு ஒரிரு நிமிடங்கள் வதக்கவும்.
5. கடைசியாக நண்டை போட்டு கிளறவும். மசாலாவும் நண்டும் நன்றாக கலந்ததும் ஒரு கப் தண்ணீர் , தேவைக்கு உப்பு சேர்த்து மூடி போட்டு சமைக்கவும்.தண்ணீர்  முழுவதும் வற்றியவுடன் இறக்கவும்.சுவையான நண்டு வறுவல் ரெடி.

No comments:

Post a Comment